SuperTopAds

நினைத்தால் ஆட்சியை கவிழ்ப்பாராம்..! கூறுவது சம்மந்தன்.

ஆசிரியர் - Editor I
நினைத்தால் ஆட்சியை கவிழ்ப்பாராம்..! கூறுவது சம்மந்தன்.

ஐக்கியதேசிய கட்சி அரசு தனித்து இயங்கும் பலத்தை கொண்டதல்ல. நாடாளுமன்றில் 113 உறுப்பினா்கள் கூட இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் பலத்துடனேயே ஐக்கியதேசிய கட்சி அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.  எமது ஆதரவுதான் வரவு செலவு திட்டத்தை வெற்றிபெற செய்தது. 

நாம் நினைத்தால் இந்த அரசை எந்த நேரத்திலும் கவிழ்ப்போம். ஆகவே இந்த அரசு தமிழ் மக்கள் தங்கள் உாிமைகளை அனுபவிக்க இடமளிக்கவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா். 

நாங்­கள் அர­சைப் பாது­காத்து வரு­கின்­றோம் என்று வெளி­யில் சிலர் விச­மத்­த­ன­மான பரப்­பு­ரை­களை மேற்கொண்டு வரு­கின்­ற­னர். உண்­மை­யில், அர­சைப் பாது­காப்­பது எமது நோக்­கம் அல்ல. தமி­ழர்­க­ளுக்­கான உரி­மை­களை வென்­றெ­டுக்­க­வும், 

நிரந்­த­ர­மான ஓர் அர­சி­யல் தீர்­வைக் காணும் வகை­யி­லும்­தான் இந்த அர­சுக்கு நாம் ஆத­ரவு வழங்கி வருகின்றோம். இதை அர­சு­டன் நாம் நடத்­தும் பேச்­சு­க­ளின்­போது தெளி­வா­கக் கூறி­யுள்­ளோம். அதை உணர்ந்து அரசு செயற்­பட வேண்­டும். இல்­லை­யேல், 

அர­சுக்­கான எமது ஆத­ரவை விலக்­கிக்­கொள்­வோம். அப்­போது அரசு கவிழ்ந்தே தீரும். புதிய அர­ச­மைப்பு உருவாக்­கத்­துக்­கான பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­த­போ­தி­லும், தற்­போது அந்­தப் பணி­கள் இடை­நிறுத்தப்­பட்­டுள்­ளன. 

அந்­தப் பணி­க­ளைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கு­மாறு அர­சி­டம் நாம் வலி­யு­றுத்­தி­யுள்­ளோம். ஐ.நா. தீர்­மானத்தின் பரிந்­து­ரை­க­ளை­யும் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சி­டம் நாம் கோரி­யுள்­ளோம். ஐ.நா. ஊடாக அர­சுக்கு அழுத்­தம் வழங்கி வரு­கின்­றோம். 

ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை இலங்கை அரசு உதா­சீ­னம் செய்­தால் அதன் விளைவு மிக­வும் பாரதூரமா­ன­தாக – மோச­மா­ன­தாக இருக்­கும் – என்­றார்.