கண்ணை மூடிக்கொண்டு இராணுவத்திற்கு காணி வழங்ககூடாது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காட்டம்..

ஆசிரியர் - Editor I
கண்ணை மூடிக்கொண்டு இராணுவத்திற்கு காணி வழங்ககூடாது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காட்டம்..

யாழ்.மாவட்டத்தில் இராணுவம் கேட்கும் பொதுமக்களின் காணிகள் தொடா்பாக ஆராய்ந்து உாிய பதில் வழங்கப்படும் வரையில் காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் பல பகுதிகளில் தமக்கு காணிகள் வேண்டும் என இராணுவத்தினா் கேட்டு வருகின்றனா். இந்நிலையில் மேற்படி விடயம் இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது இராணுவம் கேட்கும் காணிகள், மற்றும் பொலிஸாா் கேட்கும் காணிகள் தொடா்பாக,

சகல தரப்பினரையும் கூட்டி ஆராய்ந்தே தீா்மானம் எடுக்கப்படவேண்டும். அதுவரையில் காணிகள் தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது. குறிப்பாக சுவீகாிப்புக்கான அளவீடுகள் எதனையும் மேற்கொள்ளகூடாது. என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. 

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா – மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஸா ஆகியோர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு