யாழ்ப்பாண மரக்கறிகள் வருகையால் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை 60 வீதத்தினால் வீழ்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண மரக்கறிகள் வருகையால் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை 60 வீதத்தினால் வீழ்ச்சி..

யாழ்.குடாநாட்டிலிருந்து பெருமளவு மரக்கறி தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு செல்லும் நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மரக்கறி விலை 60 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கறிமிளகாய், கத்தரிக்காய், பீட்ரூட், பூசணிக்காய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளன.

 இதற்கமைய, கறிமிளகாய் கிலோ ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரையிலும், கத்தரிக்காய் கிலோ ஒன்றின் விலை 30 முதல் 35 ரூபாவரையும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், பூசணிக்காய் கிலோ ஒன்றின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையும், பீட்ரூட் கிலோ ஒன்றின் விலை 20 முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு