புத்தளம், யாழ்ப்பாணம், ஹம்பகா, பொலனறுவை, கண்டி, மாத்தறை மாவட்டங்கள் பாதிப்பு தீவிரம், 3 லட்சத்து 21 ஆயிரத்து 185 போ் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
புத்தளம், யாழ்ப்பாணம், ஹம்பகா, பொலனறுவை, கண்டி, மாத்தறை மாவட்டங்கள் பாதிப்பு தீவிரம், 3 லட்சத்து 21 ஆயிரத்து 185 போ் பாதிப்பு..

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியினால் இதுவரையில் 75,429 குடும்பங்களை சோ்ந்த 3லட்சத்து 21ஆயிரத்து 185 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அனா்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அவற்றுள் புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், கம்பஹா, மாத்தறை, பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பல பிரசேங்களில் குடிநீருக்கான பிச்சினைகள் அதிகரித்துள்ளன. எனவே குடிநீரை விநியோகிக்கும் செயற்பாடுகள் பிரதேச செயலகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அதிக வெப்பம் கொண்ட காலநிலை தற்போது நிலவுகின்றமையினால், மக்கள் அதற்கேற்றவாறு பாதுகாப்பு செயலாற்பாடுகளை கையாள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக மலையக தோட்டபுறங்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு  வயிறோற்றம் மற்றும் வாந்திபேதிகள் ஏற்படுவது குறித்து  அவதானமாக இருக்குமாரு பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் அநேகமான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் குறித்த நோயினால் பாதிக்கபட்டு நாளாந்தம் வைத்தியசாலைக்கு வருகை தருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த கொதித்தாரிய நீரை பருக வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு