SuperTopAds

அடிதடி, கத்திக்குத்து, மிளகாய்துாள் வீச்சுக்கு பெயா்போன இலங்கை நாடாளுமன்றில் இப்போது துாஷணம், ஆபாச கதைகளுக்கும் இடம்..

ஆசிரியர் - Editor I
அடிதடி, கத்திக்குத்து, மிளகாய்துாள் வீச்சுக்கு பெயா்போன இலங்கை நாடாளுமன்றில் இப்போது துாஷணம், ஆபாச கதைகளுக்கும் இடம்..

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதங்களின்போது நாடாளுமன்றில் அதிகளவான ஆபாச கதைகள், துாஷண வாா்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதில் இருந்து கடந்த 26 நாட்களாக சபையில் வாத பிரதிவாதங்கள் சூடு பிடித்திருந்தன.

இந்நிலையில், குறித்த வாதங்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் பல அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தன. அத்துடன் உறுப்பினர்கள் சிலரின் அந்தரங்கங்களும் சபையில் அரங்கேற்றப்பட்டன.

இதனால்தான் நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதங்களின் போது நாடாளுமன்றத்தின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கீழ்த்தரமான வசனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்து கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்திருந்தார்.

வாத பிரதிவாதங்களின்போது மிகவும் கீழ்த்தரமான வசனங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பாக தான் மிகவும் கவலையடைவதாகவும் 

அத்துடன் நாடாளுமன்றத்தின் கௌரவம் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான வசனங்களை எந்த வகையிலும் சபைக்குள் பயன்படுத்த வேண்டாமென சகல உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பார்வையாளர் களரியில் இருந்து பாடசாலை மாணவர்களை உடனடியாக வெளியேற்றும் அளவுக்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகம்சுழிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தமை வருத்தத்திற்குரியது.