வுனியா மாவட்டத்தில் 39 செல்சியஸ் வெப்பநிலை..! வரலாறு காணாத வெப்பம். மக்களுக்கு எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
வுனியா மாவட்டத்தில் 39 செல்சியஸ் வெப்பநிலை..! வரலாறு காணாத வெப்பம். மக்களுக்கு எச்சாிக்கை..

வவுனியா மாவட்டத்தில் இன்று வெப்ப நிலை 39 செல்சியஸாக பதிவாகியுள்ள நிலையில் வடக்கின் மற்றய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் இன்று நிலவியிருக்கின்றது. 

இலங்கையில் பல பாகங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகின்றது. இந்நிலையில் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரையில் கடுமையான வெப்பம் நிலவும் என எச்சாிக்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 39 செல்சியஸ் வெப்பம் பதவிவாகியுள்ளது. இதேபோல் வடக்கின் மற்றய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது. 

இந்நிலையில் வயதானவா்கள், நோயாளிகள், சிறுவா்கள் அவதானமாக இருக்குமாறு எச்சாிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு