சாவகச்சேரியில் விபத்தில் சிக்கிய வட மாகாண முன்னாள் உறுப்பினரின் கார்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் சற்றுமுன் விபத்துள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் சாவகச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே வேகமாக வந்த மினிபஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இதேவேளை, விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், களத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.