மின்வெட்டுக்கு 10ம் திகதி சாவுமணி..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டுக்கு 10ம் திகதி சாவுமணி..

இலங்கையில் மின் தேவையை நிவா்த்தி செய்ய 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வளம் கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிா்வரும் 10ம் திகதி புதன் கிழமை தொடக்கம் மின்வெட்டு நடைமுறை நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எாிசக்தி அமைச்சா் ரவி கருணாநாயக்க கூறியுள்ளாா். 

‘நாட்டில் ஏற்பட்டுள்ள 300 மெகா வாட்ஸ் மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறை கடந்த ஆண்டு தொடக்கம் உள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைத்தில் 500 தொடக்கம் 600 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். மின் நெருக்கடிக்குத் தீர்வு காண குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது.

தேசிய மின் வழங்கலில் 3 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரத்து 500 மெகா வோட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகாலத் திட்டத்துக்கான வரைவு அமைச்சரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்படவுள்ளது.

அதனால் குறுகிய காலத் தீர்வாக தேசிய மின் வழங்கலில் மேலும் 500 தொடக்கம் 600 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு