பிாிகேடியா் பால்ராஜிடம் மீண்டும் தோற்றுப்போன அரச புலனாய்வு பிாிவு. ஊடகம் ஒன்றுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது யாழ்.நீதிவான் நீதிமன்றம்.

ஆசிரியர் - Editor I
பிாிகேடியா் பால்ராஜிடம் மீண்டும் தோற்றுப்போன அரச புலனாய்வு பிாிவு. ஊடகம் ஒன்றுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது யாழ்.நீதிவான் நீதிமன்றம்.

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதி பிாிகேடியா் பால்ராஜ் குறித்து கட்டுரை எழுதியமை தொடா்பில் அச்சு ஊடகம் ஒன்றுக்கு எதிராக பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் தொடா்ந்த வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

“அந்தக் கட்டுரையால் பாதிக்கப்பட்டவர் யார்? அவரின் முறைப்பாடு தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தமது அறிக்கையில் வெளிப்படுத்தவில்லை. எனவே அதிகாரிகளின் உரிய அறிவுறுத்தல், ஆலோசனையைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

தமிழ் தந்தி பத்திரிகையில் “வீரத் தளபதி பால்ராஜ்” என்ற தலைப்பில் வெளியாகிய கட்டுரையின் ஊடாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அதனால் அந்த ஊடகத்தின் ஆசிரியரை விசாரணைக்குட்படுத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை வழங்கக் கோரியும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற  நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மன்றின் கட்டளைக்காக எடுக்கப்பட்டது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரி மன்றில் முன்னிலையானார்.

பத்திரிகையின் ஆசிரியரும் அவரின் சார்பில் மூத்த சட்டத்தரணி நடராஜா காண்டீபன் மன்றில் முன்னிலையானார்.

ஊடகத் துறையின் பொறுப்பு மற்றும் அவற்றின் உரிமை பற்றி சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட விளக்கங்களை விபரித்த நீதிவான், இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆழமாக ஆராய்ந்து கட்டளையை வாசித்தார்.

“ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத்துறை உள்ளது. ஆனால் தேசிய நலன், பொது மக்கள் பாதுகாப்பு, இனம் – மத நல்லிணக்கம் ஆகியவற்றில் ஊடகங்கள் பொறுப்பாகச் செயற்படுவது அவசியம்.

அந்த வகையில் இந்த வழக்கில் தேசிய நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக பத்திரிகை மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

பத்திரிகை கொழும்பிலிருந்துதான் வெளியிடப்படுவதாக எதிர் தரப்பால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதனால் இந்த நீதிமன்றுக்கு நியாயத்திக்கம் இல்லை என அந்த தரப்பால் கூறப்பட்டுள்ளது. மேலும் குறித்த கட்டுரையால் எந்தவொரு பாதிப்பும் இடம்பெறவில்லை எனவும் எதிர்த் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்ற நியாயத்திக்கத்தை வைத்து இந்த வழக்கை நிராகரித்துவிட முடியாது. யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பத்திரிகை 10 ரூபாவுக்கு விநியோகிக்கப்படுவதாக வழக்குத் தொடுனர் அறிக்கையிட்டுள்ளார்.

இந்த வழக்கில் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையின் மூலம் பாதிக்கப்பட்டவர் யார்? அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் மற்றும் அவரின் முறைப்பாடு தொடர்பில் வழக்குத் தொடுனர் வெளிப்படுத்தவில்லை.

அதிகாரிகளின் உரிய ஆலோசனைகள் – அறிவுறுத்தல்கள் இன்றி இவ்வாறான வழக்கைத் தொடர்வதால் பயனில்லை. எனவே பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இந்த வழக்குத் தொடர்பில் உரிய ஆலோசனைகளைப் பெற்று பொருத்தமான நீதிமன்றில் வழக்கை தொடர மன்று அறிவுறுத்துகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு