தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் சொன்னதை கேட்டிருந்தால் முஸ்லிம் மக்கள் நின்மதியாக வாழ்ந்திருப்பா்.. கண்கெட்ட பின் சூாிய நமஸ்காரம்.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் சொன்னதை கேட்டிருந்தால் முஸ்லிம் மக்கள் நின்மதியாக வாழ்ந்திருப்பா்.. கண்கெட்ட பின் சூாிய நமஸ்காரம்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரனின் பேச்சை கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாா் மாவட்டத்தில் நின்மதியாக வாழ்ந்திருப்பாா்கள் என ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினா் முஜிபூா் ரஹ்மான் கூறியுள்ளாா். 

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“வில்பத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்து சமூகத்தை பிழையாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

வில்பத்து சரணாலயம் அமைந்திருப்பது அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலாகும். எனினும், தற்போது மக்கள் மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசத்திலேயே குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சைக்கேட்டிருந்தால் இன்றும் முஸ்லிம் மக்கள் மன்னாரில் வாழ்ந்திருப்பார்கள்.

எனினும், நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காக செயற்பட்டதாலே விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்டார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு