ஊழல் பெருச்சாளிகளை தொடை நடுங்கவைத்த நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு..
திருகோணமலை- கந்தளாய் பிரதேச செயலருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகா் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அரச பணம் 30 லட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்த 30 லட்சத்துடன் மேலதிகமாக 90 லட்சத்தினை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறும் பட்சத்தில் 5 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் பிரதேச சபைக்குரிய வங்கிக் கணக்கில் இருந்து அரச பணம் 30 லட்சத்தினை பெற்று அரைமணி நேரத்தில் அவரின் சொந்த கணக்கில் வைப்பு செய்துள்ளார்.
பின்னர் மூன்று, நான்கு மாதங்களின் பின்னர் நிரந்தர வைப்பில் இருந்து தனது சேமிப்புக்கு மாற்றியுள்ளார்.
பிரதேச சபை அதிகாரிகள் வங்கி முகாமையாளரை ஆதாரப்பூர்வமாக நிறுத்தி மன்றில் சாட்சி வழங்கியுள்ளனர்.
இதன் பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 10 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.