இன்று தொடக்கம் 15ம் திகதி வரையில் 42 செல்சியஸ் வரை வெப்பம் அதிகாிக்கும். இலங்கை மக்களுக்கு அவசர எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 15ம் திகதி வரையில் 42 செல்சியஸ் வரை வெப்பம் அதிகாிக்கும். இலங்கை மக்களுக்கு அவசர எச்சாிக்கை..!

இன்று தொடக்கம் 15ம் திகதி வரையில் வெப்ப நிலை 42 செல்சியஸ் அளவில் அதிகாிக்கும் என கூறியிருக்கும் கால நிலை அவதான நிலையம், வடமேல் மாகாணம், மன்னாா், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற இடங்களில் பாதிப்பு அதிகமாகும் எனவும் எச்சாித்துள்ளது. 

சூரியன், இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக உச்சங் கொடுக்குமெனவும், இதற்கமைய இன்று நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் 42 செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் நிழலான இடங்களில் வசிக்குமாறும், அதிக நீராகாரத்தை பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் இதுகுறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு