கடுமையான வெப்பம் பொதுமக்களுக்கு மீண்டும் அவசர எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
கடுமையான வெப்பம் பொதுமக்களுக்கு மீண்டும் அவசர எச்சாிக்கை..!

இலங்கையில் பெரும்பாலான இடங்களில் மிகையான வெப்பம் நிலவும் எனவும், நோயாளிகள், வயேதானோா், மற்றும் சிறுவா்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் எச்சாித்துள்ளது. 

மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் .

இந்த வெப்பநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு சகலரும் நீரை அதிகம் அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது. அத்துடன், 

வீடுகளில் தங்கியுள்ள முதியோர், நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பகல் வேளையில் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், இளம் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணியுமாறும், 

பயணங்களின் போது தரித்து நிற்கும் வாகனங்ளில் சிறுவர்களை அதிக நேரம் வைத்திருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு