கலியாண திருடனை பிடிக்க மணமகளாக மாறியிய பெண் பொலிஸ், யாழ்ப்பாணத்தில் நடந்த சுவாரஸ்யம்..
யாழ்.மாவட்டத்தில் பல பெண்களை ஏமாற்றி அல்லது திருமண ஆசை காண்பித்து திருமணம் செய்ததுடன், திருமணம் செய்வதாக கூறி பெருமள பணத்தை சூறையாடிய இளைஞா் ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
குறித்த இளைஞனை பிடிப்பதற்காக பொலிஸாா் மணப்பெண்ணாக மாறிய சுவாரஸ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
‘பத்திரிகை மூலம் மணமகள் தேவையென விண்ணப்பம் செய்தே குறித்த சந்தேகநபர் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் யாழில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதோடு, அவர்களுடைய நகைகளையும், சொத்துகளையும் பெற்றுகொண்டு தலைமறைவாகி விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதோடு அவரின் மனைவி, குழந்தைகள் கிழக்கு மாகாணத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட இளவாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காங்கேசன்துறை விசேடக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவில் அண்மையில் செய்த முறைப்பாட்டிற்கமைவாக,
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மூலம் இளைஞரை சிக்க வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.