சிறப்பு தடுப்புமுகாம்களில் வாடும் 11 ஈழ தமிழா்கள். இவா்களுக்காகவும் பேசுங்கள்..
இந்திய புலனாய்வு அமைப்புக்களினால் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டு நீதிமன்றத்தினாலேயே விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞா்கள் தொடா்ந்தும் சிறப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வருகின்றனா்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கை தமிழா்களுக்கு உணவு வழங்கல் மற்றும் உதவு தொகை போன்றன தொடா்ச்சியாக மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த தமிழா்களுடைய விடுதலை தொடா்பாக இந்திய, இலங்கை ஊடகங்கள் கேள்வி கேட்கவேண்டும்.
என சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பபட்டுக் கொண்டிருக்கின்றது. 26.06.2016ம் திகதி இலங்கையிலிருந்து சுற்றுலா வந்த இலங்கை தமிழா்களான தயானந்தன் , சத்தியசீலன், தர்சன் , சுதர்சன் , றொபின்பிரசாத் , கோபிநாத் , தயாகரன் , குருவிந்தன், காந்தறூபன், பிரபாகரன், றமேஸ் ஆகியோரை
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காலப் பகுதியில் வழக்கு விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர் இருபினும் இவர்கள் இன்னும் திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை தமது நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவா்கள் தொடா்பாக இதுவரை இரு நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என கூறப்படுகின்றது.