SuperTopAds

ஐபிஎல் 2019: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றி

ஆசிரியர் - Admin
ஐபிஎல் 2019: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றி

ஐபிஎல் 2019 சீசனின் 7-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டான் டி காக்கும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் மளமளவென உயர்ந்தது.

அணியின் எண்ணிக்கை 54 ஆக இருக்கும்போது டி காக் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவும் ரோகித் சர்மாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 33 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 48 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  

அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 24 பந்தில் 38 ரன்னும், யுவராஜ் சிங் 12 பந்தில் 23 ரன்னுடனும் வெளியேறினர்.

மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அணியின் ரன் வேகம் குறைய தொடங்கியது. கடைசி கட்டத்தில் பாண்ட்யா 14 பந்துகளில் 3 சிக்சர்கள், 2பவுண்ட்ரி உள்பட 32 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்துள்ளது.

பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், மொகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமைய வில்லை. மொயீன் அலி 13 ரன்னிலும், பார்தீவ் பட்டேல் 31 ரன்னிலும் , வெளியேறினர். அடுத்ததாக வந்த கோலியும், டி வில்லியர்சும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 46 ரன்னில் அவுட் ஆனார். 

பின்னர் வந்த ஹெட்மையர் 5 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து வந்த கிராண்ட்ஹோம் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த ஷிவம் டுபே, டி வில்லியர்சுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். சிறப்பாக ஆடிய டி வில்லியர்ஸ் அரை சதம் அடித்தார். கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 13 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.