SuperTopAds

ஆளுநர் மூலம் ஆளுகைகளை கையாள்வது ஜனநாயக செயற்பாடு அல்ல:- இரா.சம்பந்தன்

ஆசிரியர் - Admin
ஆளுநர் மூலம் ஆளுகைகளை கையாள்வது ஜனநாயக செயற்பாடு அல்ல:- இரா.சம்பந்தன்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க, அதிகாரங்களை பகிர்ந்து, தேர்தல் முறைமையை ஜனநாயக முறையில் மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேபோல் மாகாணசபை தேர்தல்களை பொறுத்தவரையில் வெகு விரைவில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். எவ்வளவு விரைவில் மாகாணசபை தேர்தலை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக தேர்தல் நடத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணுங்கள் என்பதே எமது நிலைப்பாடாகும்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் தேர்தல நடத்த வேண்டும். ஆளுநர் மூலமாக ஆளுகைகளை கையாள்வது ஜனநாயக செயற்பாடு அல்ல. மாகாணசபை உறுப்பினர்களின் மூலமாகவே அதனை கையாள முடியும். மக்களுக்கான சேவையை மாகாணசபைகளின் மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் மூலமாகே கையாள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.