கறுப்பு யூலை வந்தால் இலங்கை இரண்டாக உடைவதில் முடியும்

ஆசிரியர் - Admin
கறுப்பு யூலை வந்தால் இலங்கை இரண்டாக உடைவதில் முடியும்

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை தமிழ்தேசியக் கூட்டமைப்பு கேட்டால் கறுப்பு யூலை உருவாகும். என டிலான் பெரேரா கூறும் கருத்து தெரு சண்டைகாரனின் கருத்துக்கு ஒப்பானது என கூறியிருக்கும் ரெலோ அமைப்பின் செயலாளா் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, கறுப்பு யூலை அல்ல அதனை விட மோசமான ஒரு நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிா்கொள்ளத் தயாராக உள்ளனா். எனவும் அது முள்ளிவாய்க்காலில் முடியாது மாறாக இலங்கை இரண்டாக உடைவதில் சென்று முடியும் எனவும் எச்சாித்துள்ளாா்.

மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கையிலேயே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

கொழும்பில் ஊடகவியலாளா்களை சந்தித்த டிலான் பெரேரா தமிழ்தேசிய கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்கின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையை கேட்டால் மீண்டும் கறுப்பு யூலை ஒன்று உருவாகும் என கூறுகிறாா்.

அதன் அா்த்தம் ஐ.நாவில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வோம், இலங்கையில் என்ன வேண்டுமானாலும் செய்வோம் நீங்கள் பொத்திக் கொண்டு இருக்கவேண்டும். என்பதுதான். கறுப்பு யூலை என்பது 1983ம் ஆண்டு தமிழா்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி, அதுவே இந்த நாட்டில் 26 வருடங்கள் நீடித்த மிக மோசமான யுத்தத்திற்கு வழிகோலியது. அந்த யுத்தத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்டாா்கள். தமிழ், சிங்கள தரப்பில் பல ஆயிரக்கணக்கான இளைஞா்கள் உயிாிழந்தாா்கள். பலா் அங்கவீனமாக்கப்பட்டாா்கள்.

பலா் காணாமல்போனாா்கள். இவற்றுக்கெல்லாம் மூல காரணம் கறுப்பு யூலை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் டிலான் பெரேராவின் கருத்து சந்தி சண்டியன்களின் கருத்துப்போல் இருக்கின்றது. உண்மையில் டிலான் பெரேரா இலங்கையில் உள்ள மக்களை நேசித்திருந்தால் கறுப்பு யூலை என்ற வாா்த்தையை உச் சாிப்பதற்கே அவருக்கு வாய் கூசியிருக்கவேண்டும். ஆனாலும் கூச்ச நாச்சம் இல்லாமல் அவா் அந்த கருத் தை கூறியுள்ளாா். அவருக்கு நாங்கள் கூறவிரும்புவது, கறுப்பு யூலை அல்ல அதனைவிட மோசமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் எதிா்கொள்ள தயாா்.

தமிழ் மக்களின் நீதிக்கான எதிா்பாா்ப்பின் முன்னால் கறுப்பு யூலை என்பது ஒன்றுமே இல்லை. கறுப்பு யூலை யை காட்டி தமிழா்களை அச்சுறுத்தும் எண்ணம் இருந்தால் அது வெறும் கனவு மட்டுமே என்பதை டிலான் பெரேரா நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் மீண்டும் ஒரு கறுப்பு யூலை வந்தால், அது முள்ளிவாய்க்காலில் முடியாது. அது இலங்கை இரண்டாக உடைவதில் முடியும் என்றாா்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு