முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு புற்றுநோய்!
முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து, குருகந்த ரஜமஹா விகாரை என்ற பௌத்த ஆலயத்தையும் ,பாரிய புத்தர்சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் பௌத்த பிக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த வழக்கின் ஒருதரப்பான பௌத்த பிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளதன் காரணமாக மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் மன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்புக்காக ஏப்ரல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.