மக்கள் விரோத, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியில் இடமில்லை!

ஆசிரியர் - Editor I
மக்கள் விரோத, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியில் இடமில்லை!

சட்டவிரோதமான செயற்பாடுகளையும் சமூகவிரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தமையால் கட்சியிலிருந்து சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டவர் சுந்தர்சிங் விஜயகாந்த். அவர் வெளியேற்றப்பட்ட தினத்தன்றே அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியை எமது கட்சி பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தது.

அதன் பின்னர் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அவரை தொடர்ந்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று ஊடகங்களில் வெளிப்படுத்துவதானது எமது கட்சியின் நற்பெயருக்கு சேறுபூசும் செயற்பாடாகவே கருதுகின்றோம்.

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான காலத்தில் அவர் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சி என்ற கட்சி ஒன்றை உருவாக்கியிருந்ததுடன் அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவந்த நிலையில் அவர் கோப்பாயில் நடைபெற்ற நகைக்கொள்ளை ஒன்றில் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபை வேட்பாளராகவும் சுந்தர்சிங் விஜயகாந்த் உள்ள நிலையில் அவர் மீதான அவதூறுகள் சுமத்தப்படும் சந்தர்ப்பங்களில் அவரை தொடர்ந்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்று ஊடகங்களில் வெளிப்படுத்துவதானது எமது கட்சியின் மீது மீண்டும் சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவே கருதுகின்றோம் என்பதுடன் இச்செயற்பாடானது ஊடக தர்மங்களுக்கு முரணாக உள்ளதுடன் கண்டனத்துக்கும் உரியதொன்றாகும். இது தொடர்பான முறைப்பாட்டை நாம் தேர்தல் ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈ.பி.டி.பிக்கான வெற்றியை மக்கள் உறுதி செய்துள்ள நிலையில் அந்த வெற்றியை தடுக்கும் நோக்கத்தோடு இத்தகைய அவதூறுகளையும் சேறு பூசல்களையும் செய்யும் பணியில் சில ஊடகங்கள் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு