உச்சகட்ட கோபத்திற்கு ஆளான விஜய் ரசிகர்கள்! அதிரவைத்த போஸ்டர்.

ஆசிரியர் - Admin
உச்சகட்ட கோபத்திற்கு ஆளான விஜய் ரசிகர்கள்! அதிரவைத்த போஸ்டர்.

விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவில் உள்ளது. தமிழகம் முழுக்க அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த அமைப்பு மூலம் பல சமுதாய நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டு விசயத்தில் விஜய் நேரடியாக மெரினாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் தான் வெளியே தெரியாத படி கலந்துகொண்டார். தற்போது அவரின் ரசிகர்கள் பொள்ளாச்சி பாலியல் கொடுமை விசயத்தில் கொதித்து போய் இருக்கிறார்கள். 

இந்த விசயத்தில் இனி தமிழகத்தில் பாலியல் குற்றம் புரிபவர்களை விரைவில் தண்டிக்கபட வேண்டும்! இல்லை துடிதுடிக்க தலை துண்டிக்கபட வேண்டும் என வாசகம் இடம் பெற்றுள்ளது போஸ்டரை மதுரை மாவட்ட ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.

Radio
×