துரோகியென தெரிவித்த கூட்டமைப்பு எங்களது வழிமுறைக்கு வந்துவிட்டது! டக்ளஸ் எம்.பி

ஆசிரியர் - Admin
துரோகியென தெரிவித்த கூட்டமைப்பு எங்களது வழிமுறைக்கு வந்துவிட்டது! டக்ளஸ் எம்.பி

நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை துரோகி என்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டமைப்பு எங்களது வழிமுறைக்கு வந்திருந்தாலும், எங்களது பொறிமுறைக்கு இன்னும் வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவூட்டும் கூட்டம் இன்று முற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சி என்ற கொள்கையுடன் நாங்கள் தொடர்ந்து பயணித்துவருகின்றோம். எமது கருத்துகள் போதியளவு மக்களை சென்றடைவதில்லை.

சில தமிழ் கட்சிகளும், ஊடகங்களும் எங்களது யதார்த்தமான கருத்துகளை மக்களுக்கு எட்டக்கூடிய பாதைகளை விரும்பாத காரணத்தினால் திட்டமிட்ட வகையில் எங்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

எனினும் நாங்கள் எங்கள் கொள்கைமீது உறுதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருந்து வருகின்றோம். மக்கள் சரியான திசையினை நோக்கிவர வேண்டும். அந்த நம்பிக்கையுடனேயே எமது செயற்பாடுகளை முன்கொண்டு செல்கின்றோம்.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் எங்களை வெற்றிபெறச் செய்தால் நாங்கள் தமிழ் மக்களின் பல பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.

நாங்கள் அன்றாட பிரச்சினைக்கு தீர்வாக, அபிவிருத்திகளுக்கான தீர்வாக, அரசியல் உரிமைக்கான தீர்வாக மூன்று திட்டங்களை முன்வைத்துள்ளோம். இதுவே எங்களது நீண்டகால கொள்கையாகும். நாங்கள் அதில் எந்த மாற்றத்தினையும் செய்யவில்லை.

இயக்கங்களின் போராட்டங்களினால் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் 13வது திருத்த சட்டத்தினை பலப்படுத்தி முன்கொண்டு செல்வதன் மூலமே ஒரு நிலையான தீர்வினைப்பெறுவதற்கான யதார்த்தமான அணுகுமுறையாகும்.

இதனையே நாங்கள் ஆரம்பகாலம் தொடக்கம் முன்வைத்துவருகின்றேன். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் சீர்திருத்ததிற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.

அன்று நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை துரோகியென்றார்கள். ஆனால் அவர்களும் அதே இடத்துக்கு வந்துள்ளனர்.

எனினும், எங்களது வழிமுறைக்கு கூட்டமைப்பு வந்திருந்தாலும் எங்களது பொறிமுறைக்கு இன்னும் வரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு