SuperTopAds

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது

ஆசிரியர் - Admin

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வருடந்தோறும் நடைபெறும் மாவட்ட சம்மேளன தெரிவானது இன்று 07-03-2019 காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது.

இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் மஜித், மாவட்ட இளைஞர் சேவை அதிகரி பூலோகராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிலைய பெறுப்பதிகாரி டியூக் குரூஸ், ஏனைய ஐந்து பிரதேச சம்மேளங்களில் இருந்தும் நான்கு இளைஞர் சேவை அதிகாரிகளும், ஐந்து பிரதேச சம்மேளன இளைஞர்களும், யுவதிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது கடந்த வருடத்திற்கான செயலாளர் அறிக்கையும் பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. 

இதில் புதிய மாவட்ட சம்மேளன தலைவராக தேசிய சம்மேளன உபதலைவர் யசோதரன் மன்னார் மாவட்டத்தின் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவ்வருடம் வாக்கெடுப்பு எதுவுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.