ஒவ்வொரு தொடருக்கு ஒவ்வொரு கேப்டன்… சிரிப்பு காட்டும் இலங்கை அணி !!

ஆசிரியர் - Editor2
ஒவ்வொரு தொடருக்கு ஒவ்வொரு கேப்டன்… சிரிப்பு காட்டும் இலங்கை அணி !!

தொடர் தோல்விகளால் தவித்து வரும் இலங்கை அணி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பெரேராவை நீக்கியுள்ளது.

இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரையும் ஒரு போட்டி விடாமல் 9-0 என வென்றது. இதையடுத்து இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டும் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரை இழந்தது.

பின் இந்தியா வந்த இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரையும் இழந்து தவித்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பெரேரா, தொடர் தோல்வி காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மேத்திவ் அல்லது தினேஷ் சண்டிமல் கேப்டனாக பொறுப்பேற்கலாம் என தெரிகிறது. 6 மாதங்களுக்கு முன்பாக தான் மேத்திவ் தன் கேப்டன் பொறுப்பை துறந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Radio
×