2வது ஒருநாள் போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஆசிரியர் - Admin
2வது ஒருநாள் போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து தவான் 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 18 ரன்னிலும் வெளியேறினர்.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தியது. 46 ரன் எடுத்தபோது, விஜய் சங்கர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். கேதர் ஜாதவ் 11 ரன்னிலும், டோனி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி தனது 40வது சதத்தை அடித்தார். அவர் 116 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆரோன் பின்ச்சும், உஸ்மான் கவாஜாவும் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை தாண்டியது.

அணியின் எண்ணிக்கை 83 ஆக இருக்கும்போது ஆரோன் பின்ச் 37 ரன்னில் அவுட்டானார். அவரை கவாஜாவும் 38 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கியஷான் மார்ஷ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் பொறுப்புடன் ஆடினார். அவர் 48 ரன்னில் ரன் அவுட்டானது ஆட்டத்தின் திருப்பு முனையானது. ஹேண்ட்ஸ்கோமுக்கு ஸ்டாய்னிஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் அரை சதமடித்து இறுதி வரை போராடி 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் 500வது வெற்றி இதுவாகும். 

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், பும்ரா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.  இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2 -0 என முன்னிலை வகிக்கிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு