அரசியல் நிலவரங்கள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அலைனா பீ.டெப்லிட்ஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று இந்தச் சந்தப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.