இரா.சம்பந்தனை ஒரு போதும் சுடத் திரியவில்லை என்கிறார் சிறீதரன்!

ஆசிரியர் - Admin
இரா.சம்பந்தனை ஒரு போதும் சுடத் திரியவில்லை என்கிறார் சிறீதரன்!

இரா.சம்பந்தனை விடுதலைப் புலிகள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மைதன்மை தனக்குத் தெரியாது என்றும், ஆனால் தான் ஒருபோதும் அவரை சுடுவதற்காக திரியவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனை விடுதலைபுலிகள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மை தொடர்பில் தெரியாது எனவும், நான் ஒருபோதும் அவரை சுடுவதற்காக திரியவில்லை எனவும் தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளின் சுடப்படும் பட்டியலில் தான் இருந்ததாக தெரிவித்தபோது அப்பட்டியலில் தானும் இருந்ததாக சம்பந்தனே தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரை தலமையாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு விடுதலை புலிகள் தேர்தல் வெற்றியும் கண்டனர் எனவும் தெரிவித்தார்.

விடுதலை புலிகளும் குற்றம் செய்தனர் என்பது தொடர்பில் சுமந்திரன் கூறி வருகின்ற விடயம் தொடர்பில் உண்மைத்தன்மை உள்ளதா என அவரிடம் வினவியபோது,

யுத்தம் இடம்பெறுகையில் எவரும் உண்மைதன்மையாக செயற்பட மாட்டார்கள். போராட்ட இயக்கங்களிடம் உண்மை தன்மை இருக்க வே்ணடும் என எதிர்பார்க்கவும் முடியாது. ஐநா அமர்வில் விடுதலை புலிகளும் 4 குற்றங்களை செய்துள்ளனர் என அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் படையினரே அதிகம் குற்றம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ள ஒரு நாட்டில் அவர்களால் இளைக்கப்பட்ட குற்றங்கள் பிரதானமாக காணப்படும். அதேவேளை விடுதலைப்புலிகள் இளைத்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அவ்வமைப்பை வழிநடத்தியவர்கள் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்களிடம் விசாரணை செய்யட்டும் எனவும் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் 4 இலட்சத்திற்கு மெல் மக்கள் அங்கு உள்ளனர் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர். பசில் ராஜபக்ச மிக குறைவான ஆட்களே அங்கு இருந்தனர் என தெரிவித்தபோது ஆனந்தசங்கரி, ராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதென பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதையும் மீறி படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். கொத்து குண்டுகள், விமான தாக்குதல்களாலும் தாக்குதல்களை மூர்க்கமாக மேற்கொண்டனர். இவ்வாறான நிலையில் யுத்த குற்றம் தொடர்பில் அதிகம் பொருப்பு கூற வேண்டியவர்கள் படையினரே எனவும் தெரிவித்தார்.

சுமந்திரன் கூறிய கூற்று சரியானதா என மீண்டும் அவரிடம் வினவியபோது,சுமந்திரன் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு இருக்கவில்லை. இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் அவருக்கு தெரியாது. வெறுமனே அவர் அறிக்கைகளை வைத்தே அவர் கருத்துக்களை தெரிவித்து வரலாம் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு