யாழ் திருக்குடும்பங் கன்னியர் மடம் தேசிய பாடசாலையின் வருடாந்த விஞ்ஞான, வணிக தின நிகழ்வில் மாநகர முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

ஆசிரியர் - Admin
யாழ் திருக்குடும்பங் கன்னியர் மடம் தேசிய பாடசாலையின் வருடாந்த விஞ்ஞான, வணிக தின நிகழ்வில் மாநகர முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

யாழ் திருக்குடும்பங் கன்னியர் மடம் தேசிய பாடசாலையின் வருடாந்த விஞ்ஞான மற்றும் வணிக தின நிகழ்வு கல்லூரி அதிபர் வண.எஸ் ஆர். ஏ.டீ. அம்ரிதா அவர்களின் தலைமையில் (2019.02.28) காலை 8.30 மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார். 

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் முகாமைத்துவ உதவியாளர் திருமதி நளாயினி ஆனல்ட் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் பாடசாலையின் விஞ்ஞான மன்றத்தினால் 'பரிதிச் சுடர்' என்ற நூலும், வணிக மன்றத்தினால் 'வணிக தளிர்' என்ற நூலும் ஒன்றாக வெளியீடு செய்யப்பட்டது. 

நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு