ஆப்கானிஸ்தான், அயர்லாந்துக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஆசிரியர் - Admin
ஆப்கானிஸ்தான், அயர்லாந்துக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2- 0 என கைப்பற்றியது. 

இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டேராடூனில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாவித் அஹ்மதியும், ஹஸ்ரத்துல்லா ஷாஷையும் களமிறங்கினர்.

பொறுப்புடன் ஆடிய ஹஸ்ரத்துல்லா ஷாஷை அரை சதமடித்து 67 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜாவித் அஹ்மதி 22 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா 54 ரன்னிலும், ஹஷ்மத்துல்லா ஷஹிதி 52 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஆப்கானிஸ்தான் அணி 48. 3 ஒவரில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1- 0 என முன்னிலை வகிக்கிறது. #AFGvIRE

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு