“எமது நிலம், எமது வாழ்வு” கொழும்பில் வாழும் உாிமைக்காக போராட்டம் நடத்திய தமிழ் மக்கள்..

ஆசிரியர் - Editor I
“எமது நிலம், எமது வாழ்வு” கொழும்பில் வாழும் உாிமைக்காக போராட்டம் நடத்திய தமிழ் மக்கள்..

“எமது நிலம், எமது வாழ்வு” தமது சொந்த காணிகளில் வாழும் உாிமைக்காக போரா டும் மக்களுடைய வாகன தொடரணி போராட்டம் இன்று கொழும்பு- கோட்டையில் பாாிய மக்கள் போராட்டமாக இடம்பெற்றது. 

காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் ஏற்பாட்டில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இய க்க அனுசரணையில் கடந்த 26 ஆம் திகதி கேப்பாப்புலவில் இருந்து வாகன பேரணி ஆரம்பமானது.கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார்,வவுனியா, 

புத்தளம் நகர் வரை செய்ய பேரணி, இன்று கொழும்பு தொடருந்து நிலையத்தைச் செ ன்றடைந்தது.கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக வடக்கு, கிழக்கு, ம லையகம் உட்பட பல இடங்களில் இருந்தும் வந்த மக்கள் 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டனர்.“எமது நிலம் எமக்கு வேண்டும், எமது வீடு எமக்கு வே ண்டும், எமது காடு எமக்கு வேண்டும், விடுதலை செய் விடுதலை செய் எமது காணி களை விடுதலை செய்,

வேண்டும் வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு நீதி வேண்டும், எமது கா ணிகளை விட்டு இராணுவமே வெளியேறு“ உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுப்ட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு