யாழ். புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் அங்கஜன் இராமநாதன்!
யாழ்ப்பாணம் - புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) உருளைக்கிழங்கு அறுவடை விழாவிற்கு உருளைக்கிழங்கு விவசாயிகளின் அழைப்பின் பேரில் முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும், உருளைக்கிழங்கு விவசாயிகளின் தற்கால பயிர்செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயக உத்தியோகத்தர்கள், மாவட்ட கமக்கார அமைப்பு அதிகாரசபை தலைவர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.