SuperTopAds

இறுதிப் பந்தில் தோல்வி அடைந்த இந்திய அணி

ஆசிரியர் - Admin
இறுதிப் பந்தில் தோல்வி அடைந்த இந்திய அணி

20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்திய அணி தனது கடைசி பந்தில் தோல்வியை தழுவியது 4-வது முறையாகும். 

இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு நியூசிலாந்திடமும் (வெலிங்டன்), 2010 இல் இலங்கையிடமும் (கிராஸ் ஐலெட்), 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்திடமும் (மும்பை) கடைசி பந்தில் இந்திய அணி தோற்று இருந்தது. 

இந்திய அஸ்திரேலிய அணிகள் 2 ரி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ரி20 போட்டி நேற்று தொடங்கியது. 

நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்துள்ளது. 

பின்னர், 127 ஓட்டங்களை இலக்காக கொண்டு அவுஸ்திரேலியா களமிறங்கியது. 

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதை அடுத்து, டி20 தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.