மரண அறிவித்தல்: திருமதி. சுப்பிரமணியம் தவமணி

யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன்(லண்டன்), கவிதா(மாவீரர்), தர்சினி(லண்டன்), கோபிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரமதி, தங்கராசா, இராசலட்சுமி, மனோன்மணி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, மகேஸ்வரி, நவரத்தினம், இராசரத்தினம், கனகரத்தினம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமித்திரா(லண்டன்), பிரசன்னா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற முருகேசு, செல்வநாயகி, இரத்தினம், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், தெய்வேந்திரம்பிள்ளை, இராசேந்திரம்பிள்ளை, இலட்சுமி, ஆனந்தி, லோகநாயகி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சபிரா, டானியா, குபேஸ், அனிஸ், பவிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
அன்பில் எல்லையில்லாதவள்
எங்கு போனாள் தெரியவில்லை...
ஓய்வறியாதவள்
நிரந்த ஓய்விற்கு
போனது ஏனோ...
உன் முடிவுகளை மாற்றும்
எமது வல்லமை உன்னிடம்
செயலிழந்து போனதுவே...
அஞ்சலி சொல்ல
நெஞ்சில் வலுயில்லை எமக்கு...
தஞ்சமாய் நிற்கின்றோம்.
உன்னைத் தேடியபடியே
எம்முழ் நாமே
பஞ்சமா உன் நினைவிற்கு!
விழிக் கூடுகளில்
அளியா விம்பமாய்
உன் தரிசனம்.
உலகிற்கு நீ
விடைகொடுத்து விட்டாய்...
எம் உள்ளத்தை விட்டு
என்றும் விடை கொடுக்க
மாட்டோம் உனக்கு...
-அருள்வாசன் தெய்வேந்திரம்பிள்ளை-
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.