இலங்கையில் இடியுடன் கூடிய அடைமழை பெய்யும்! பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
இலங்கையில் இடியுடன் கூடிய அடைமழை பெய்யும்! பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

அடுத்து வரும் ஆறு மணித்தியாலங்களில் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகளவான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக பகுதிக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையத்தில் மண் சரிவு, மரம் முறிந்து விழுதல், சுவரில் வெடிப்புகள் ஏற்படல் உட்பட பல ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சில பிரதேசங்களில், மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் பிரதி இயக்குநர் மேலும் தெரிவித்துள்ளார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு