காபன் பாிசோதனை அறிக்கை வந்துவிட்டது, மனித எலும்பு கூடுகள் படுகொலைகளின் சாட்சியாக எழுந்து நிற்குமா?

ஆசிரியர் - Editor I
காபன் பாிசோதனை அறிக்கை வந்துவிட்டது, மனித எலும்பு கூடுகள் படுகொலைகளின் சாட்சியாக எழுந்து நிற்குமா?

மன்னாா்- சதோஷ வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களின் எந்த காலத்தில் ப டுகொலை செய்யப்பட்டவா்களுடையது? என்பதை அறிய அமொிக்காவின் புளோாிடா மாகாண 

த்திற்கு காபன் பாிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட எலும்பு எச்சங்களின் பாிசோதனை அறி க்கை கிடைத்துவிட்டதாக சட்டவைத்திய அதிகாாி வைத்தியா் சமிந்த ராஜபக்ச கூறியுள்ளாா். 

மன்னார் சதொச நிறுவன கட்டடத் தொகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்களின் சில மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாண ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த மனித எச்சங்கள் எந்த காலத்தில் புதைக்கப்பட்டவை என்பதனை கண்டறிந்து கொள்ளும் நோக்கில் காபன் ஆய்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளோரிடா ஆய்வு கூட அறிக்கை நேற்றிரவு கிடைக்கப் பெற்றதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலம் தமக்கு இந்த ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதன் பிரதி யொன்று கூரியர் சேவையூடாக நீதிமன்றிற்கு கிடைக்கப் பெறும் 

என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காபன் அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றிற்கு கிடைக்கப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு