போா்குற்ற விசாரணை வேண்டாம் என கூறிய பிரதமா், நக்குண்டான் நாவிழந்தான் என்ற நிலையில் வாயை மூடிக் கொண்டிருந்த கூட்டமைப்பு..
தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன, அரச ப டைகள் மீதான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன. எனவே மறப்போம், மன்னிப் போம் என்பதன் அடிப்படையில் போா்குற்ற விசாரணைகள் தேவையில்லை.
மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா், இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொல்லப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள், படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏன்.. தமிழ் அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள். அதேபோல, இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.
இவற்றிற்கு எதிராக இரண்டு தரப்பும் வழக்கு தொடர முயன்றால், முடிவின்றி மாறி மாறி தொடர்ந்து கொண்டு செல்லலாம். இதையெல்லாம் மறந்து, மன்னித்து, உண்மையை கண்டறிந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதே அவசியமானது“ என்றார்.