போக்குவரத்து விதிகளை சாியாக பின்பற்றுங்கள்.. மிக இறுக்கமான சட்டம் நடைமுறைக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor
போக்குவரத்து விதிகளை சாியாக பின்பற்றுங்கள்.. மிக இறுக்கமான சட்டம் நடைமுறைக்கு வருகிறது..

இலங்கையில் 10 பாாிய போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கும் சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

வீதிப் போக்குவரத்துக்களில் இடம்பெறும் பெரியளவிலான விதி மீறல் குற்றங்களுக்கான தண்ட ப் பணத்தை அதிகரிப்பதற்கான சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இந்தச் சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படவுள்ளது.  வீதிப் போக்குவரத்தி ல் தற்போது விபத்துக்கள் அதிகரித்து வருவதால் 10 பெரியளவிலான போக்குவரத்து விதி 

மீறல்களுக்கான தண்டப்பணத்தை 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவையால் குழு அமைக்கப்பட்டது. 

போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்துக் குத் திணைக்கள ஆணையாளர் மற்றும் பிரதி சொலிஸ்ரார் ஜெனரல் ஆகியோர் 

கொண்ட குழுவே ஆராய்ந்தது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட மோட்டார் போக்குவரத்து சட்டத் திருத்த வரைவை போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க 

அமைச்சரவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைத்தார். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தச் சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படவுள்ளது. சட்ட வரைவு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio
×