SuperTopAds

இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது

ஆசிரியர் - Admin
இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் ஓட்டங்களள் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 

அடுத்து வந்த அம்லா 3 ஓட்டங்களில் வெளியேறினார். மார்கிராம் 11 ஓட்டங்களில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 17 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு பவுமா உடன் தலைவர் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 

இருந்தாலும் டு பிளிசிஸ் 35 ஓட்டங்களிலும் பவுமா 47 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். கடைநிலை வீரர்களை வைத்துக் கொண்டு டி காக் 80 ஓட்டங்கள் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 59.4 ஓவரில் 235 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 

இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜித 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இதுவரையில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களை பெற்றுள்ளது.