SuperTopAds

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்குள் நுழைய பிரதமாின் பாதுகாப்பு பிாிவுக்கே தடை..

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை கடற்படை முகாமிற்குள் நுழைய பிரதமாின் பாதுகாப்பு பிாிவுக்கே தடை..

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி அங்குராப்பண நிகழ் வில் கலந்து கொள்வதற்கா வருகைதரவுள்ள நிலையில், பிரதமாின் பாதுகாப்பு பிாிவினா் காங் கேசன்துறை கடற்படைமுகாம் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 6 தினங்களுக்கு முன்னா் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்ற து. பிரதமா் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு  

யாழ்ப்­பா­ணத்­துக்கு நாளை வர­வுள்­ளார். காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்­திப் பணி­களை ஆரம்­பித்து வைக்­க­வுள்­ளார். பலாலி வானூர்­தித் தளத்­தை­யும் சென்று பார்­வை­யி­ட­வுள்­ளார். தலைமை அமைச்­சர் செல்­ல­வுள்ள இடங்­க­ளில் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வது 

அவ­ரது பாது­காப்­புப் பிரி­வி­ன­ரின் பொறுப்­பா­கும். அதற்­காக அந்தஇடங்­க­ளுக்கு முற்­கூட்­டியே சென்று நிலை­மை­களை ஆராய்­வது தலைமை அமைச்­சர் பாது­காப்­புப் பிரி­வின் வழ­மை­யான நட­வ­டிக்­கை­யா­கும்.

அதற்கு அமை­வாக காங்­கே­சன்­துறை துறை­மு­கத்­துக்கு தலைமை அமைச்­சர் பாது­காப்­புப் பிரி­ வி­னர் 6 நாள்­க­ளுக்கு முன்­னர் சென்­றுள்­ள­னர். முகா­முக்­குள் செல்­வ­தற்கு அவர்­க­ளுக்கு அனு­ மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இதே­போன்று, பலாலி வானூர்தி நிலைய வான்­ப­டை­யி­ன­ருக்­கும், தலைமை அமைச்­சர் நாளை வியா­ழக்­கி­ழமை செல்­ல­வுள்ள விவ­கா­ரம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. பலாலி வானூர்தி நிலை­யத்­ துக்கு தலைமை அமைச்­சர் வர­வுள்­ளாரா என்று வான் படை­யி­னர் 

தலைமை அமைச்­சர் அலு­வ­ல­கத்­தி­டம் வின­வி­யுள்­ள­னர். இதன்­பின்­னரே, தலைமை அமைச்­ச­ ரின் யாழ்ப்­பாண பய­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள குழப்­பம் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. அதை­ய­  டுத்து தலைமை அமைச்­ச­ரின் நிகழ்சி நிரல் பாது­காப்பு அமைச்­சுக்கு 

அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு அமைச்சு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கீழ் உள்ள நிலை­யில் இந்­தச் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன.