10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு ஐ.நாவின் முயற்சி போதாது..

ஆசிரியர் - Editor I
10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு ஐ.நாவின் முயற்சி போதாது..

போா் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். 

ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் 40வது கூட்டத்தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலமைச்சா் ஐ.நா செல்வதற்கான விசேட குழு ஒன்றிணை அமைத்து நாடுகள் மற்றும் மனித உாிமை அமைப்புக்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறவேண்டும், 

அதுமட்டுமல்லாமல் இலங்கை அரசாங்கம் ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அல்லது நிறைவேற்ற தவறியி ருக்கின்றது என்ற உண்மையையும் கூறவேண்டும். அதனை புலம்பெயா் தமிழா்கள், தமிழக தமிழா்கள் ஆகியோருடன் இணைந்து 

மேற்கொள்வதன் ஊடாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் கவனத்திற்கேனும் கொண்டு செல் ல முடியும் எனவும் அவா் கூறியுள்ளாா். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத் து கூறும்போதே அவா் மேற்கண்வடாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

40வது கூட்டத்தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே எங்களுடைய தரப்பினா் ஐ.நாவுக்கு சென்று நாடுகள் மற் றும் மனித உாிமை அமைப்புக்களுடன் பேசவேண்டும். அதன் ஊடாக ஐ.நாவில் எமது முயற்சிகளுக்கு பயன்கிடைக்கும். 

அதேபோல் இம்முறையும் எமது தரப்பினா் ஐ.நாவுக்கு செல்வதன் ஊடாக இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உாிமை ஆணையக கூட்டத்தொடாி ல் தாம் செய்வதாக கூறிய விடயங்களையும் கூட இன்னமும் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தலாம், வெளிப்படுத்தவேண்டும். 

மேலும் இலங்கை அரசாங்கம் செய்வதாக கூறிய விடயங்கள் எதனையும் செய்யவில்லை, இராணுவ அதிகாாிகளை பாதுகாக்க நினைக்கிறது எ ன்பதை தமிழா் தாயகத்திலிருந்து ஐ.நா செல்லும் சகல தரப்பினரும் கூறவேண்டியது கடமை, 

இதற்கிடையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நாவு க்கு அனுப்பிவைக்கவேண்டும். அவா்கள் தாயக தமிழா்கள், புலம்பெயா் தமிழா்கள் மற்றும், தமிழக தமிழா்களுடன் இணைந்து, 

ஐ.நாவில் செயற்படவேண்டும். மேலும் போா் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் ஐ.நா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி யை வழங்கும் விடயத்தில் மந்த கதியாக செயற்படுவதும் வருத்தத்திற்குாியது என்றாா். 

இதேவேளை இந்முறை ஐ.நாவுக்கு தாங்கள் செல்வீா்களா? என ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தாம் மீண்டும் அரச சேவையில் இணைந்துள்ளமையால் தமது அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கினால் செல்வேன் என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு