SuperTopAds

சிங்கள மக்களின் மனங்களை மாற்றலாம் என சம்மந்தன் கனவு காண்கிறார், அது வெறும் கனவு மட்டுமே..

ஆசிரியர் - Editor I
சிங்கள மக்களின் மனங்களை மாற்றலாம் என சம்மந்தன் கனவு காண்கிறார், அது வெறும் கனவு மட்டுமே..

இலங்கை அரசின் நிகழ்வுகளில் பங்கேப்பதன் ஊடாக சிங்கள மக்களின் மனங்களில் மாற் றத்தை உண்டாக்கலாம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் திடமாக நம்புகிறார். 

நாம் எவ்வாறு நடந்து கொண்டாலும் அவர்களுடைய மனங்களில் மாற்றம் வருவதற்கு சந்தர் ப்பம் இல்லை. என்ற உண்மையை உணர்ந்து கொள்ள அவர் தயாராக இல்லை. என நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார். 

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  கூட்டமைப்பின் தலைமை தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு 

போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பில் தமது நிலைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் சுதந்திர தினம் சம்பந்தமாக கட்சி ரீதியாக முடிவுகள் இதுவரை காலத்தில் எடுக்கப்படவில்லை.

கடந்த காலத்தில் சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் சுதந்திர தின நிகழ்வுகளில் நல்லெண்ணத்தி னை வெளிப்படுத்தும் வகையில் பங்கெடுத்திருந்தார்கள். தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூ லம் பெரும்பான்மையினரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் 

என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றது பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன் ஐயா இல்லை. தற்போதுள்ள களச் சூழலி ன்படிஇ தந்தை செல்வா போன்று சம்பந்தன் ஐயாவும் 

ஈற்றில் கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்றுவார் என்று கூறுகின்றாரோ தெரியா து. என்னைப் பொறுத்த வரையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கும் இன ரீதியான அழிப்புக்களுக்கு 

மத்திய தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மன ரீதியான தயார் நிலை தமிழர்களுக்கு ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.