"மிஸ்டர்.லோக்கல்" படக்குழுவுக்கு சிறப்பு பரிசு கொடுத்த நயன்தாரா.

ஆசிரியர் - Admin

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு