நீதிக்காக மாபெரும் மக்கள் பேரணிக்கு அழைப்பு, காணாமல்போனவா்களின் உறவினா்கள் அழைப்பு..
காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2 வது வருடதினம் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் 40 வது மனித உாிமைகள் கூட்டத்தொடர் ஆரம்ப தினத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டிய மாபெரும் பேரணி ஒன்று கிளநொச்சியி மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ளது.
இம்மாதம் 25ம் திகதி காலை இந்த பேரணி நடத்தப்படவுள்ளது. இது குறித்து காணாமல் ஆக்கப் பட்டவா்களின் உறவினா்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கடந்த யுத்த காலத்தில் பெரும்பான்மையாக வடக்கிலும் கிழக்கிலும், குறிப்பிட்ட சந்தர்ப்பங்க ளில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வைத்து இலங்கை அரசபடையினராலும் - இலங்கை காவ ல்துறையினராலும் கைதுசெய்யப்பட்டும்,
சட்டத்துக்கு விரோதமாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டும் இன்றுவரை எவ்வித தகவலும் இல்லாதிருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை குடிமக்களான தமிழர்களை மீட்டுத்தரக்கோரி பல்வேறு காலப்பகுதிகளிலும் நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றதையும்,
தற்போதும் இதே கோரிக்கைகளுடனான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் தாங்கள் நன்கறிவீர்கள். காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோரும் பிள்ளைகளும் உறவினர்களும் குறிப்பாக இலங்கையின் வடபகுதியில்
கிளிநொச்சியில் கடந்த இரண்டு வருடங்கள் நிறைவடைந்து 3 வது வருடம் ஆரம்ப தினம் 25 ம் திகதி ஆரம்பமாகிறது அத்துடன் முல்லைத்தீவில் இருவருடங்களாகவும் வீதியோரங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கண்ணுக்குமுன்னால் அரசபடையினரால் கடத்தப்பட்டும் - ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட இரவுநேரத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டும் - பகல்வேளையில் சனநெரிசல் மிகுந்த நகரங்களில் வெள்ளைவாகனங்களில் ஏற்றி
கடத்தப்பட்டும் - இராணுவமுகாம்களுக்கு அல்லது பொலிஸ்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைப்பட்டு காணாமலாக்கப்பட்டும் - இறுதிப்போரின் நிறைவில் இராணுவக்கட்டுப்பாடு பகுதிகளில் வைத்து இராணுவத்தினரிடம்
உயிருடன் கையளிக்கப்பட்டும் - மதகுருக்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் இராணுவத்தினரிடம் உயிருடன் சரணடைந்தும், ஆனால் இன்றளவு வரை இவர்களைப்பற்றிய எந்த தகவலும் அரசாங்கத்தினால் வழங்கப்படாத உறவினர்கள்,
தமது பிள்ளைகளையும் - சகோதரர்களையும் - தந்தையை - தாயை மீட்டு தருமாறு கேட்டு வீதியிலிறங்கி போராட்டம் நடாத்துகின்றார்கள். அரசு மௌனம் காக்கும் கடந்தகாலங்களிலும் இக்காலத்திலும், தமது உறவினரின் நிலைபற்றி அரசாங்கத்தையும் அரசதலைவரையும்
கேள்விகேட்க வேண்டியிருப்பதன் காரணம் இந்தமக்கள் இவ்வளவு காலமும் இதற்கான தீர்வை கோரிய பொறுப்புக்கூறலுடைய தரப்புக்களால் ஏமாற்றப்பட்டமையே ஆகும். காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை வெறுமனே சில
குடும்பங்களின் பிரச்சினையல்ல, சமூகப்பிரச்சனையுமல்ல, வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சினை மட்டுமல்ல - மாறாக இது ஒரு இனத்துக்கான பிரச்சினை. இலங்கைத்தீவில் காலாகாலமாக மண்ணின் மரபுத்தொட்டு
வாழும் தமிழ் இனத்தின் பிரச்சினை! காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களின் கோரிக்கைகளுக்காக நீதியும் நியாயமுமான பதிலை வழங்கவேண்டும் ! ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றாது
சமாளிக்கும் அரசும் சர்வதேசமும் விழித்தெழவேண்டும்! ஆகையால் வருகின்ற 25 ம் திகதி ஆரம்பமாக இருக்கின்ற கூட்டத்தொடரில் முடிவெடுக்கவேண்டிய கடமை ஐக்கியநாடுகள் சபைக்கு உண்டு!
எனவே எதிர்வரும் 25 ம் திகதி கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள்,மதகுருமார்கள்,
அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு உறவுகளை தேடியலையும் எம் அன்னையர்,சகோதர,சகோதரிகளுக்காய் சர்வதேசம் குரல்கொடுக்க வேண்டும் என்பதோடு நல்லாட்சி என கூறும் இனவாத
அரசிற்கு கால அவகாசம் துளியேனும் வாழங்க கூடாதென்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி உடனடியாக எமக்கான தீர்வினை வழங்கவேண்டி
எம் உறவுகளுக்காய் அணிதிரளுமாறு பணிவுடன் அழைப்பு விடுக்கிறோம்.