ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினா்கள் இனி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இல்லை. எழுத்துமூலம் உத்தரவு..
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இணைத் தலைவா்களாக கடமையாற்றிய ஸ்ரீலங்கா சு தந்திரக்கட்சியின் உறுப்பினா்களின் இணைத்தலமை இரத்து செய்யப்படுவதாக மாவட்ட செய லா்களுக்கு எழுத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது.
மாவட்டச் செயலகங்களில் இடம்பெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிற்கு இதுவரை ப தவி வகித்த இணைத்தலைவர்களில் சுதந்திரக் கட்சி சார்பில் அங்கம் வகித்த அனைத்து நாடா ளுமன்ற உறுப்பினர்களும். பதவி இழந்த்தாக ஜனாதிபதி செயலகத்தினால்
மாவட்டச் செயலாளர்களிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் யாழ்ப்பாணம், கி ளிநொச்சி மாவட்டத்தில் இணவத் தலைவராக பதவி வகித்த அங்கயன் இராமநாதன் அந்தப் ப தவியினை இழப்பார்.
இதேநேரம் வன்னி மாவட்டத்தில் இணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்த காதர் மஸ் தானும் அப் பதவியினை இழப்பார். இதே நேரம் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடி வுற்ற நிலையில் 5 மாவட்டத்திலும் அங்கம் வகித்த
முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் இன்றியே இனி வரும் காலங்களில் ஒருங்கிணை ப்புக் குழுக் கூட்டங்களிற்கான திகதி நிர்ணயம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.