அம்பாறையில் வயலுக்குள் நின்ற 2 அடி உயரமான குள்ள மனிதன், விவசாயி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I
அம்பாறையில் வயலுக்குள் நின்ற 2 அடி உயரமான குள்ள மனிதன், விவசாயி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்..

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் வயல் காவலுக்கு சென்ற நபா் வயலுக்குள் நின்றிரு ந்த 2 அடி உயரமான மனிதனை கண்டு அச்சமடைந்துள்ளதுடன், தான் கண்ட குள்ள மனிதன் கு றித்து பரபரப்பு வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியுள்ளாா். 

இது தொடா்பாக மேலும் தொியவருவதாவது, சோளன் பயிரிடப்பட்ட வயலுக்குக் காவலுக்குச் சென்ற விவசாயி, குள்ள மனிதன் நடமாடிக் கொண்டிருந்ததை அவதானித்தார். சுமார் 2 அடி உயரமான குள்ள மனிதனைக் கண்டவுடன் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

குறித்த விவசாயி பக்கத்து வயல்களில் காவல் கடமையில் இருந்தவர்களுக்குத் தெரிவித்து, வயலுக்கு அழைத்துச் சென்றார். அதற்குள் அங்கிருந்த குள்ள மனிதன் மாயமாகி விட்டான்.

“ 2 அடி உயரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். தலைமுடி நீளமாக வளர்ந்து இருந்தது. முகம் சிவப்பு நிறமாகவும், உள்நோக்கி சென்றது போன்றும் வித்தியாசமாகக் காணப்பட்டது. உதடுகளும் சிவப்பாக இருந்தது.

 நான் விளக்கு வெளிச்சத்தை அந்த நபர் முகத்தில் அடித்து சத்தமிட்டேன். எனினும் அவர் ஒரு அடி கூட நகரவில்லை. உடனே அச்சமடைந்த நான் ஓடிச் சென்றேன். மற்ற விவசாயிகளை அழைத்து வந்து பார்த்தேன். 

ஆனால் அந்த நபரை காணவில்லை“ என்று விவசாயி தெரிவித்துள்ளார். குள்ள மனிதர் வந்து சென்றதற்கான பாதச்சுவடுகள் ஆதாரமாக காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்பு அநுராதாபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரை இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு