தமிழீழ விடுதலை புலிகள் படுகொலைகளை செய்தாா்களாம், ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் ஆவணப்படத்தை வெளியிட்ட சீ.வி.விக்னேஸ்வரன்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் படுகொலைகளை செய்தாா்களாம், ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் ஆவணப்படத்தை வெளியிட்ட சீ.வி.விக்னேஸ்வரன்..

சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள "இயக்க வரலாறு" எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  (ஈ .பி.ஆர்.எல்.எப்) யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

அதன் போதே குறித்த ஆவண படத்தினை முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார்.  குறித்த ஆவணப்படத்தில் , விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ரெலோவினை விடுதலைப்புலிகள் தடை செய்து  அதன் உறுப்பினர்கள் 151 பேரையும் , 51 பொதுமக்களையும் சுட்டு கொன்றனர் எனவும் , கந்தன் கருணை படுகொலையின் போது 60 பேரை சுட்டு கொன்றதாகவும்,

பத்மநாபா உள்ளிட்ட 13 பேரை 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி படுகொலை செய்ததாகவும் குறித்த ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு