ஒற்றுமையை குலைத்தவர்களை புலிகள் கொன்றனர், அதுபோல் நாம் செய்வது? செய்ய முடியுமா?

ஆசிரியர் - Editor I
ஒற்றுமையை குலைத்தவர்களை புலிகள் கொன்றனர், அதுபோல் நாம் செய்வது? செய்ய முடியுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நபரையும் அல்லது கட்சியையும் வெளியேற்றவில்லை. அவர்கள் தாங்களாகவே வெளியேறியிருக்கின்றனர். ஆகவே ஒற்றுமையைப் பேணுவதில் கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் பின்நின்றது கிடையாது. 

கூட்டமைப்பு எப்பொதும் ஒற்றுமையையே வலியுறுத்துவதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதரையும் என்ற தலைப்பில் மக்கள் கருத்தறியும் அரசியல் கருத்தரங்கு தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இன்று நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும தெரிவிக்கையில்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு குறைந்ததற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் தான். குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அவருடைய செயற்பாடுகளினாலே தென்மராட்சிக்கு கிடைக்க வேண்டிய பிரதிநித்துவம் கூட கிடைக்காமல் போயிருந்தது. 

அதாவது விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள், வீட்டுக்கு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார். அதனாலேயே ஒரு சில வாக்குகளால் இங்கு கிடைத்திருக்க வேண்டிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் நழுவிப் போயிருந்தது. 

அத்தோடு ஆதரவும் குறைந்தது என்றார். கூட்டமைப்பில் இருந்து எவரையும் அல்லது எந்தவொரு கட்சியையும் நாங்கள் வெளியேறச் சொல்லி சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தாங்களாகவே சுயமாக வெளியே சென்றார்கள். ஒற்றுமையை பேணுவதில் கூட்டமைப்பு எந்தெவொரு காலத்திலும் பின்நின்றது கிடையாது. 

புலிகளுடைய காலத்தில் ஒற்றுமை பேணப்பட்டது என்று சொல்கின்றீர்கள். உண்மையில் ஒற்றமை பேணப்பட்டது தான். ஆனால் அதை மீறியவர்கள் கொல்லப்பட்டார்கள். அதனை நாங்கள் செய்ய முடியுமா?

ஈ.பீ.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாட்டைப் பார்த்து எங்களுக்குப் பயம் இல்லை. அதில் முதலமைச்சர் எங்களைச் சாடியுள்ளார். இன்றைக்கு சரித்திர நாளேடு என்று ஒன்றை அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். 

அதில் தங்கள் தோழர்கள் கொல்லப்பட்ட தினம் குறிப்பிட்டு அதில் விடுதலைப்புலிகள் பற்றியும் 60 ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்றும் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

புலிகளை விமர்சிக்க வேண்டாம் எங்களிடம் கூறுகின்றனர். அவ்வாறு விமர்சிப்பதால் தான் பலம் குறையுது என்றும் சொல்கின்றனர். ஆனால் இன்றைக்கு புலிகள் மீது விமர்சனம் நடந்துள்ளது. அப்ப அவர்களிடமும் அதைப்பற்றி கேளுங்கள்.

2010 இல் இருக்கிற தேர்தல் நிலைப்பாடு தான் 2013, 2015 இலும் இருக்கிறது. ஆனால் இஅரண்டுமஅ; வேறுபாடு உள்ளதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தார் அத்தோடு நிராகரிப்பதாகவும் கூறியிருக்கின்றார். 

அதனால் 2015 பொது தேர்தலில் விக்கினேஸ்வரன் அதில் உள்ளவாறு செயற்படவில்லை. ஆனால் இரண்டும் ஒரே மாதிரியான இரண்டு விஞ்ஞாபனம் தான். 

அவ்வாறு ஒரேமாதிரியாகவே இருந்தும் அவர் நிராகரித்திருக்கின்றார். ஆகவே ஏன் அதனை நிராகரிக்கிறார் என்று ஊடகவிவியலளர்கள் கேட்ட போது இன்னும் நான் படிக்கவில்லை படித்துவிட்டு கூறுவதாகச் சொல்கிறார். இது தான் அவரது நிலைப்பாடுடன் கூடிய கருத்துக்களாக இருந்தது.

சட்டம் ஒழுங்கு மாகாண சபைக்குரியது. அதை மாகாண சபை எடுத்து நிர்வகித்திருக்கலாம். அப்படியாக பொருத்தமான அதுக்கு ஒருவர் மாகாண சபைக்கு நாங்கள் அனுப்பினோம். ஆனால் அவர் அததை எடுத்தச் செய்யவில்லை. அதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. 

ஒரு கைதியையாவது விடுவிக்க குரல் கொடுத்தீர்களா என்று கேட்கின்றீர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை விடுவித்திருக்கிறோம். இவ்வாறு எங்களிடம் கேள்வி கேட்கின்ற தரப்புக்களிடத்திலும் கூட பல சட்டதரணிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நீதிமன்றில் போனது கூட கிடையாது. ஆனால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். 

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அரசியல் வரைவு சிறப்பானதாக நான் கருதுகிறேன். ஆனாலும் அதனை எனது கட்சியில் கூட இருக்கின்ற சிலர் அதனை ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது. 

அரசாங்கத்தை மாற்றும் செயற்பாட்டில் ஐனநாயகத்தைப் பேணும் வகையில் தான் நடந்து கொண்டோம் ஒருவேளை அரசாங்கம் மாறியிருந்தால் பல்வேறு சோதனைச் சாவடி வந்திருக்கும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு