கண்ணீர் அஞ்சலி: சிவஶ்ரீ தாணுநாத ஐயர் வாசுதேவக்குருக்கள் (யாழ். உரும்பிராய் சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலய சபரிமலை குருசுவாமி )
யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் தாவடி முருக மூர்த்தி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் உரும்பிராய் சிவதர்ம சாஸ்தா திருக்கோவில் ஸ்தாபகருமாகிய ப்ரம்மஸ்ரீ தாணு ஐயர் வாசுதேவக் குருக்கள் நேற்று (02.02.2019) சனிக்கிழமை மாலை சிவனடி சேர்ந்தார்.
அன்னார்காலஞ்சென்றவர்களான தாணு ஐயர் – மீனாட்சி அம்மா தம்பதிகளின் மகனும் மஹாதேவ குருக்கள், ஹரிஹர சுப்பிரமணிய குருக்கள், காலஞ்சென்ற இராமச்சந்திர குருக்கள் மற்றும் இலட்சுமி அம்மா, காலஞ்சென்ற இராஜம்மா ஆகியோரின் சகோதரரும் சுசீலாதேவியின் அன்புக் கணவரும் ஜெயப்பிரபா, ஜெயவத்ஸாங்க குருக்கள், விஷ்ணுவர்த்தன சர்மா, ஜெனார்த்தன சர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும் திவாகரக் குருக்கள், திலகவதி, கௌசிகா, ஜெயதேவி ஆகியோரின் மாமனாரும் அபிராமி, ஜெயகீதசர்மா, ஜெயசங்கரி, தாணுமாலய சர்மா, அவந்திகா, விஷ்ணுஜா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.02.2019) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் தாவடி முருகமூர்த்தி கோவிலடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
பிறப்பிடம்: யாழ்ப்பாணம், இணுவில்
வசிப்பிடம்: தாவடி முருக மூர்த்தி கோவிலடி
காலமான திகதி: 02.02.2019
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி: 03.02.2019
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: முருகமூர்த்தி கோவிலடி, தாவடி, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 077 845 3766
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி... ஓம் சாந்தி...