1984ம் ஆண்டு சாவகச்சோி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல், 20 பேரை காப்பாற்றியவா் இறைபதமடைந்தாா்..

ஆசிரியர் - Editor I
1984ம் ஆண்டு சாவகச்சோி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல், 20 பேரை காப்பாற்றியவா் இறைபதமடைந்தாா்..

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 பொலிஸ் உத்தியோகஸ்தரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இயற்கை எய்தியுள்ளார். 

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் கடந்த 1984 தாக்குதல் நடத்தினார்கள். 

அதன் போது அங்கு கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, 

பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த 20 சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பொலிஸ் நிலையத்தின் 

பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று, அங்கிருந்து  காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று 

ஆனையிறவு இராணுவ முகாமில் 20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் பாதுகாப்பாக ஒப்படைத்தார். 

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருபது பேரையும் காப்பற்றிய குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரை பருத்தித்துறையை சேர்ந்தவராவர். 

1937ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 25வயதில் 1962ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து கொண்டுள்ளார். 

பின்னர் பொலிஸ் சேவையில் சார்ஜென்ட் தர த்திற்கு உயர்ந்தவர் 1989ஆம் ஆண்டு தனது 52ஆவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர் 

தனது 82 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.  அவரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 03ஆம் திகதி பூரண பொலிஸ் மரியாதையுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு