SuperTopAds

மத்தியில் உள்ள அதிகாரங்கள் பகிர்த்தளிக்கப்பட வேண்டும்: ஞா.சிறிநேசன்.

ஆசிரியர் - Admin
மத்தியில் உள்ள அதிகாரங்கள் பகிர்த்தளிக்கப்பட வேண்டும்: ஞா.சிறிநேசன்.

மத்தியில் உள்ள அதிகாரங்கள் பகிர்த்தளிக்கப்பட வேண்டும் பகிர்ந்த அதிகாரங்களை மத்திய அரசு மீளவும் பறித்துக்கொள்ளாத வகையில்; அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

1987ல் இடம் பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் 32வது ஆண்டு நினைவேந்தல்  மகிழடித்தீவு சந்தியிலுள்ள நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - கொக்கட்டிச்சோலைப் படுகொலை என்பது மறுக்கமுடியாத மறைக்க முடியாத படுகொலையாக இருந்தாலும்கூட மறைக்கப்பட்ட ஒரு படுகொலையாக அரசின் இயந்திரங்கள் செய்துகொண்டிருக்கின்றன. 

விசாரணைகள் நடாத்தப்படுவதுமில்லை விசாணைகள் நடாத்தப்பட்டால் குற்றவாளிகள் சுற்றவாளிகளாக அறிவிக்ப்படுவதுமுண்டு. பாரிய மனித உரிமைகள் புரிந்தவர்களை இந்த நாட்டின் இறைமையைக் காத்தவர்கள் என்ற வகையில் பூச்சியங்களை கதாநாயகர்களைக மாற்றுகின்ற சூத்திரமும் இந்த நாட்டுக்குண்டு. 

ஒரு நாட்டின் தேசிய இனத்தை இறைமை என்ற சொலினால் உரிமைகளைப் பறித்தெடுத்து தாங்கள் வெற்றிபெற்றவர்கள் என மார்பு தட்டிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய போராளிகளின் பலம் இருந்த காலத்தில் பேச்சு வார்வாத்தைகள் நடைபெற்ற போது நாங்கள் பலமான சமஷ்டியைப் பெற்றுக்கொண்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. 

போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்ற ஜனநாயக பலத்தைவைத்துக்கொண்டு எப்படியாவது ஒரு தீர்வைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படுகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பினை எப்படியாவது பரித்துவிடவேண்டும் என சில பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டபைபை உடைத்துத் தருவேன் என்று ஒப்பந்தம் செய்துகொண்ட சில தரகர்கள் எமது கட்சியை உடைத்து பேரினவாத கழுகுகளின் இரைகளாக்கிவிடுவோம் என செயற்படுகிறார்கள். 

இந்த பிரதிநிதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதன் மூலம் பேரினவாதிகளுக்கு மகிழ்சியூட்டுகின்ற செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற சிலரை குறிவைத்து தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். 

ஓக்டோபர் சூழ்ச்சியில் திடீரென ஒருவர் பிரதமராக வரும்போது அவருக்கு பல அனுசரணைகள் செய்யப்பட்டன. அந்த காலத்தில் உண்மைகள் ஒழிக்கப்பட்டன. 

தற்போது புதிய அரசியல் யாப்பினை எட்டிப்பிடிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு முழுமையான சமஷ்டியொன்றினை இந்த அரசு கொடுக்கப்போகிறது என தென்னிலங்கையில்  எதிரணியினர் பிரசாரம் செய்கின்றார்கள். மறுபக்கம் எமது உறவுகள் தீர்வு ஒன்றும் கிடையாது என கூறுகிறார்கள். சமஷ்டி என்று வரும்போது அதில் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்” 

சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஒரு மித்த நாடு என்ற அடிப்படையில் ஏமாற்றுகின்றார்கள் என பிரசாரம் தென்னிலங்கையில் வலுவாக கொண்டு செல்லப்படுகிறது. என்றார்;